அரசு வெளிப்படையாக இருக்க வேண்டும்! – ஹர்ஷ டி சில்வா கோரிக்கை!

21c4d09b0f94434789c1116898a912f5
21c4d09b0f94434789c1116898a912f5

யுவானைப் பயன்படுத்தி சீனாவிடமிருந்து பெற்ற சில கடன்களை திருப்பிச் செலுத்த முடியும் என்று அரசு உறுதியளித்திருந்தாலும், இந்தக் கடன்களின் விலைப்பட்டியல் டொலர்களில் எழுதப்பட்டுள்ளதால் டொலரிலேயே அரசு செலுத்த வேண்டியிருக்கும்என்று சுட்டிக்காட்டினார் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டில் டொலரின் பெறுமதி உயர்வடைந்து வருவதால் அரசால் அத்தகைய கடன்களைச் செலுத்தக்கூடிய வாய்ப்பு அரிதாகவே உள்ளது. இந்நிலையில் யுவானில் கடன்களை செலுத்த முடியும் என்று அரசு கூறி, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க முயற்சிக்கிறது. இவை நடைமுறை தீர்வுகள் அல்ல.

எனவே, அரசை வெளிப்படையாக இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” – என்றார்.