அஞ்சல் தொழிற்சங்கங்களினால் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்

0dc6a225 81c6ba09 sl post 850x460 acf cropped 1
0dc6a225 81c6ba09 sl post 850x460 acf cropped 1

சில அஞ்சல் துறை தொழிற்சங்கங்கள், நேற்று நள்ளிரவு முதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு முறைமையில் நிலவும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், உடன் அமுலுக்குவரும் வகையில் அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணிக்குழாமினரின் விடுமுறைகளையும் இரத்துச் செய்வதற்கு அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

அஞ்சல் தொழிற்சங்க நடவடிக்கையால், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை, அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

உடல்நலக் குறைப்பாட்டினால், சேவைக்கு சமூகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில், அரச வைத்திய சான்றிதழ் முன்வைக்கப்பட வேண்டும் என அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.