விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு இன்று முதல் விசேட நடவடிக்கைகள்

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

தினந்தோறும் இடம்பெறும் முச்சக்கர் வண்டி மற்றும் உந்துருளி விபத்துக்களினால் 5-6 பேர் உயிரிழப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்துக்கொள்வதற்காக, இன்று முதல் நான்கு தினங்களுக்கு விசெட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகளின் தரம் மற்றும் அவை இயங்கும் நிலை என்பவற்றை ஆராய்வதற்கே இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த சோதனையின் நோக்கம் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது மட்டுமே என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.