நாட்டில் நேற்று புதிய 264 கொரோனா நோயாளர்கள் அடையாளம்!

Coronavirus.COVID19 300x150 1
Coronavirus.COVID19 300x150 1

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 264 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 92,706 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 238 பேர் மினுவாங்கொட – பேலியகொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

இதனால் மினுவாங்கொட – பேலியகொட கொவிட் கொத்தணியில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 87,910 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஆறு பேர் சிறைச்சாலைகளிலிருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் என்பதுடன், 20 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.

இதேவேளை நேற்யை தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 161 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,251 ஆக பதிவாகியுள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 2,887 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 353 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதனிடையே நேற்று கொரோனா  தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.

இதற்கமைவாக இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 568 ஆக அதிகரித்துள்ளது.