வவுனியா கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து முஸ்லீம் இளைஞன் கைது

kaithu

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து முஸ்லீம் இளைஞனொருவன் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக தற்போது காணப்படும் நிலையில் நேற்றைய தினம் குறித்த ஆலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார்.

அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை விசாரித்தபோது கண்டி அக்குரனை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லீம் இளைஞன் என தெரியவந்துள்ளது.

உடனடியாக அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.