மருத்துவர் யமுனாநந்தா அவர்களின் கொரோனா தொடர்பான ஆலோசனைகள்

113371155 gettyimages 1204384880
113371155 gettyimages 1204384880

கொரோனா நோய்ப்பரம்பலில் மருத்துவ அணுகுமுறையில் சிந்திக்க வேண்டிய மூன்று நிலைகள்:

  1. கொரோனா கிருமித் தொற்றுநிலை
  2. கொரோனா நோய் நிலை
  3. கொரோனா நிர்பீடன நிலை
    கொரோனா கிருமித் தொற்று நிலை என்பது ஒரு நபரில் கொரோனா கிருமிகள் தொற்றிய நிலையாகும்.
    கொரோனா தொற்று உடைய அனைவரும் கொரோனா அறிகுறிகளை காட்டமாட்டார்கள். அதாவது நோய் நிலைக்கு உள்ளாக மாட்டார்கள். ஆனால் ஏனையவர்களுக்கு கொரோனா கிருமிகளை பரப்புவர்.

கொரோனா கிருமித் தொற்றுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படல் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி பேணல் கைகளை அடிக்கடி கழுவுதல் மூலம் ஏனையவர்களுக்கு பரவாது செயற்பட முடியும்.
கொரோனா நோய் நிலை என்பது கோவிட் கிருமி தொற்றியவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது கொரோனா கிருமிகளின் பெருக்கத்தினால் உடலில் ஏற்படும் அசாதாரண நிலையாகும். இதன்
போது தொண்டைநோ காய்ச்சல் இருமல் என்பன பொதுவாக இருக்கும். தலைப்பாரம் ஏற்படலாம். சுவைஉணர்வு
மோப்பப்புலன் என்பன தற்காலிகமாக பாதிக்கப்படலாம். குறித்த சிலருக்கு சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டு
மரணமும் ஏற்படலாம்.

கொரோனா நிர்பீடனநிலை என்பது ஒருவரில் கோவிட் கிருமி தொற்றுக்கு எதிராக செயற்படும் நோயெதிர்ப்புசக்தியின் அளவைக்குறிக்கும். இது இயற்கையாக கொரோனா தொற்றினால் ஏற்படலாம். அன்றேல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதனால் ஏற்படலாம்.

கொரோனா நோய் நிலையினை இன்று கையாளுவதில் சிறந்த மருத்துவ அணுகுமுறை தேவை. உதாரணமாக உலகில் 2 பில்லியன் மக்களிற்கு காச நோய் தொற்றுள்ளது. ஆனால் ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்களே காசநோய்நிலைக்கு அதாவது பாதிக்கப்படுகின்றனர். ஏனையவர்களில் காசக்கிருமி இருப்பது தெரியாது. அதாவது
காசநோய்த்தொற்று உள்ளவர்களில் 0.5 வீதம் ஆனோரே காசநோயினால் பாதிக்கப்படுகின்றனர். உலக
நாடுகளில் காசநோய் சிகிச்சைக்கான அளவு கோல்களும் வளர்முக நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்த
நாடுகளுக்கும் வேறுபடுகின்றன.

அவ்வாறே இன்று கோவிட் தொற்று நிலை தொடர்பாகவும் கோவிட் நோய்நிலை தொடர்பாகவும் கொரோனா
நிர்பீடனநிலை தொடர்பாகவும் புதிய மருத்துவ அணுகுமுறை அவசியம். மேலும் சமூகத்தில் 70 வீதத்திற்கு
மேல் கொரோனா தடுப்பூசி போடுவது சிறந்தது. அடுத்து நோய் அறிகுறி அல்லாதவர்கள் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளல் அநாவசியமானதாகும். கொரோனா தொற்றின் யதார்த்தம் உலகின் காச நோய்த்தொற்றின் யதார்த்தம் போன்று மாறிவிட்டது.