முஸ்லீம் அடிப்படைவாத அமைப்பின் கொள்கைகளை முகநூலில் பதிவு செய்த பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் கைது!

o PRISON facebook
o PRISON facebook

முஸ்லீம் அடிப்படைவாத அமைப்பின் கொள்கைகளை முகநூலில் பதிவு செய்துவந்த மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை வீட்டில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை (02) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்து 3 மாதகால காவல்துறை தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காத்தான்குடியில் பொது சுகாதார உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 38 வயதுடைய குறித்த நபர் முஸ்லீம் அடிப்படைவாத அமைப்பு ஒன்றின் அடிப்படைவாத கொள்கைகளை முகநூலில் பதிவேற்றி வந்ததுடன் அந்த அமைப்புடன் தொடர்புகளை பேணிவந்த நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் வைத்து கைது செய்யாப்பட்டுள்ளார்.