ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நாட்டில் உச்சக்கட்டப் பாதுகாப்பு 12 ஆயிரம் படையினர் களத்தில்!

ajith rohana
ajith rohana

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து தேவாலயங்களினதும் பாதுகாப்புக்காக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவற்துறை அதிகாரிகள் மற்றும் முப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று காவற்துறை பேச்சாளரும் பிரதிப் காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

காவற்துறை மற்றும் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த மொத்தம் 9 ஆயிரத்து 365 அதிகாரிகள் கடமைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் 2 ஆயிரத்து 522 முப்படையினரும் பாதுகாப்பு வழங்க ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.

நீர்கொழும்பு, சிலாபம், மற்றும் மட்டக்களப்பைச் சுற்றியுள்ள தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன” – என்றார்.