உயிர்த்த ஞாயிறு தினம் இன்று

5b98a51d844cf083418c7193dcee292b XL
5b98a51d844cf083418c7193dcee292b XL

உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுட்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

அதேநேரம், கடந்த, ஆண்டு கொவிட் 19 பரவல் காரணமாக உயிர்த்த ஞாயிறு தினத்தை கிறிஸ்தவ மக்கள் தங்களது வீடுகளில் அனுட்டித்திருந்தனர்.

இந்தநிலையில், இந்த வருடம் நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இடம்பெறும் ஆராதனைகளில் கிறிஸ்தவ மக்கள் கலந்துக்கொள்கின்றனர்.