கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டியில் வவுனியா முதலிடம்

church 6
church 6

அகில இலங்கை ரீதியிலான கிறிஸ்மஸ் கரோல் தமிழ் பாடல் போட்டியில் வவுனியா புனித சூசையப்பர் ஆலயத்தின் குழுப்பாடகர்கள் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு 50000 பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

கொழும்பு றாகம புனித பேருதுவானவர் மற்றும் பவுலடியார் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அகில இலங்கை ரீதியில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழியில் கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டியில் தமிழ் பாடல் போட்டியில் கலந்துகொண்ட வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலய குழுப்பாடகர் குழாம் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டனர்.

தமிழ் பாடல் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களான சனோஜன், நிதுஷன், டிலைக்கசன், ஜெறோன், திலோஷன், றோஷினி, சோபிகா, ஜெசிந்தா, ஜெனுஷியா வைலட், சொப்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாடல் வரிகள் சமிலா, பாடலுக்கு மெட்டமைத்த யுவராஜ், ஒழுங்கமைப்புக்களை மேற்கொண்டு ஊக்குவிப்பளித்த ஆலயப்பங்குத்தந்தை அருட்பணி இராஜநாயகம், அருட்சகோதரி ராஜி, குறித்த பாடகர் குழுவினரை ஒழுங்கமைத்த வேப்பங்குளம் ஆலய நிருவாக சபையினர் என்பது குறிப்பிடத்தக்கது.