136 மில்லியன் ரூபாவை வங்கியில் வைத்திருந்தவர் கைது!

what is the sri lankan rupee slr
what is the sri lankan rupee slr

இரத்மலானை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள ஒருவரால் தமது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 136 மில்லியன் ரூபாவை கொண்டிருந்தமைக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணச் சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பணம் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தர்மசிறி பெரேராவுக்கு சொந்தமானது என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் தர்மசிறி பெரேரா என்ற பாதாள உலக உறுப்பினர் நாட்டில் உள்ள மற்றொரு நபரின் கணக்கிற்கு 49 மில்லியன் ரூபாவை வைப்பிலிட்டிருந்தார்.

அந்த சந்தேக நபரும் மூன்று மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது கைது செய்யப்பட்ட நபர் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.