சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரிக்கு நவீன வகுப்பறை!

n
n

மலையக கல்வியில் நவீன மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இலங்கை இந்திய சமூதாய பேரவை மலையகத்தில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் நவீன வகுப்பறைகள் அமைக்கும் திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வு டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

நுவரெலிய வலய பணிப்பாளர் எம்.ஜி.ஏ.பியதாசவின் கல்லூரி நூற்றாண்டு விழாவை நோக்கிய வளர்ச்சித் திட்டங்களின் கீழ் இவ்வாறு நவீன வகுப்பறை திறந்து வைக்கப்படவுள்ளதுடன் , கல்லூரி அதிபர் வி.கோபால்ராஜ் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் வைபவத்தில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். நாளை மறுதினம் சனிக்கிழமை பகல் 1.30 க்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கை இந்திய சமூதாய பேரவையின் தலைவர் கட்டட கலை நிபுணர் ராஜூ சிவராமன் , முன்னாள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரன் மற்றும் தொழிலதிபரும் சிறந்த சமூக சேவையாளருமான தி.இராமநாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். இதே போன்றதொரு நவீன வகுப்பறை அண்மையில் நாவலப்பிட்டி கதிரேஷன் கல்லூரியிலும் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.