நாடு முழுவதும் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்!

Police
Police

பண்டிகை காலத்தில் அதிகரிக்கக்கூடிய வாகன விபத்துகள் மற்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று (10) முதல் மேற்கொள்ளப்படுவதாகக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்காக காவல்துறை சீருடை அணிந்த மற்றும் சிவில் உடை அணிந்த காவல்துறை அதிகாரிகள் சேவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கொவிட் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனால் கொவிட் பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு வர்த்தக நிலையங்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாகன விபத்துக்களை தடுப்பதற்கான விசேட சோதனை நடவடிக்கைகளும் இன்று (10) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.