சட்டவிரோத கிரவல் அகழ்வில் ஈடுபட்டுள்ள கிராம அலுவலர்: கண்டுகொள்ளாத அரச திணைக்களங்கள்

USER SCOPED TEMP DATA a265914a8a44ff8fa6092a5bf3b752d6169183739faeed66b0a80ecbd5581931
USER SCOPED TEMP DATA a265914a8a44ff8fa6092a5bf3b752d6169183739faeed66b0a80ecbd5581931

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து குவிக்கப்பட்டுள்ள போதும் இதற்கு எதிராக திணைக்களங்கள் எதுவும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

USER SCOPED TEMP DATA 91f3135ac85e2dca74a2ceeda19e4717f636b691aaf77449e201cb1fdb007e30

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கருவேலன் கண்டல் கிராமத்தில் மானுவி பகுதியிலே கிராம அலுவலர் ஒருவர் அனுமதிப்பத்திரம் அற்ற  ஒரு காணியில்  எந்தவிதமான அனுமதிப்பத்திரங்களும் பெறாது பாரியளவில் கிரவல் அகழ்வில் ஈடுபட்டுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்த அளவில் சட்டவிரோதமாக  இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்ற செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பில் உரிய திணைக்களங்கள் எந்தவிதமான பொருத்தமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்ற நிலையில் அரச அதிகாரி ஒருவரே இவ்வாறு சட்ட விரோத செயற்பாட்டை மேற்கொண்டுள்ளமை அம்பலமாகியுள்ளது

USER SCOPED TEMP DATA 25208e5d8d0c1b04550942028ee587471461a09abbd348b8de21656ab8ed56cc

அரச அதிகாரிகளின் செல்வாக்குடனும் அரசியல் செல்வாக்குடனுமே இயற்கை வளங்கள் அழிக்கப்படும் செயற்பாடு இடம்பெறுவதாக தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்படும் நிலையில்   கிராம அலுவலர் ஒருவர்  குறித்த சட்டவிரோத செயற்பாட்டை செய்கின்ற போது எந்த திணைக்களமும் அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமையானது மக்களின் குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்துவதற்காக அமைந்துள்ளது  எனவும் தெரிவிக்கப்படுகிறது

இவ்வாறு அனுமதிப்பத்திரம் இல்லாத  ஒரு காணியிலே  எந்த அனுமதிகளை பெறப்படாது  பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து  குவிக்கப்படும் வரை இதோடு சம்பந்தப்பட்டகாவற்துறையினரோ கனியவள திணைக்களமோ   பிரதேச செயலகமோ  யாருமே இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்

USER SCOPED TEMP DATA d8e25f148f365995fb3937aaa80fda22d2b2deb57b6ecaf41e99fba574a18cb9

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட  செயலகத்தில்  இடம்பெற்ற கலந்துரையாடல்களில்  அனுமதிப்பத்திர காணிகளில் கூட கிரவல் வெட்ட அனுமதிக்க  முடியாது என்கின்ற தீர்மானம்  இருக்கின்றபோது அனுமதிப்பத்திரம் இல்லாத ஒரு காணியில்  சட்டவிரோதமாக கிரவல் குவிக்கும் வரை ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி இங்கே முன்வைக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் குறித்த கருவேலங்கண்டல் கிராம அலுவலர்  அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அயல் கிராம அலுவலரான ஜெயசுதன் அவர்களே குறித்த காணியில் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் குறித்த அகழ்வு நடவடிக்கை  தொடர்பில்  தன்னிடம் எந்தவிதமான அனுமதிகளும் பெறவில்லை  எனவும் குறித்த காணிக்கு  இதுவரை காணி ஆவணங்கள் வழங்கப்படாத ஒரு காணியாகவே காணப்படுகின்றதாகவும் தெரிவித்தார்

USER SCOPED TEMP DATA 12feefa202a633896ffcfe69f66358f154d56891026258417a5bfd410068833f

அத்தோடு இந்த விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது இதுவரை அந்த பகுதியில் எந்தவிதமான கிரவல் அகழ்வு நடவடிக்கைகளுக்கும்  தாங்கள் அனுமதி வழங்கவில்லை எனவும் அவ்வாறு  இடம் பெற்றிருந்தால் அது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்

ஆனாலும் குறித்த இடத்திற்கு  பிரதேச செயலாளர் வந்து பார்வையிடுமாறு கோரப்பட்ட போதும் அவர் இன்று வரை சென்று பார்வையிடவில்லை எனவும் தெரியவருகின்றது  ஏற்கனவே குறித்த கிராம அலுவலர் இரவு நேரத்தில் கிராம அலுவலர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை தன்னுடைய வீட்டுக்கு ஏற்றி சென்றபோது காவற்துறையினருக்கும் பிரதேச செயலாளருக்கும் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவே இவ்வாறு அவருடைய அலுவலகத்தில் பணியாற்றிவரும்  ஊழியர் என்ற காரணத்தினால் அவர் இந்த விடயத்தை மூடி மறைக்க முற்படுகிறாரா   என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்

USER SCOPED TEMP DATA 7a4d0555354f92fa73143921faf6ce1fbfb297479c27f272152edb79b799c67f

அனுமதிப் பத்திர காணிகளில் கூட கிரவல்  வெட்ட அனுமதிக்க  முடியாது என்று மாவட்ட செயலகத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு இருக்கின்றபோது அனுமதிப்பத்திரம் இல்லாத  ஒரு காணியில் ஒரு கிராம அலுவலர் சட்டவிரோதமாக இவ்வாறு பாரியளவில் கிரவல் அகழ்வு செய்தமை தொடர்பில் இன்று வரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை  இவ்வாறு உயர் அதிகாரிகள் மற்றும் செல்வாக்கு என்ற காரணத்தினாலேயே முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு கொண்டிருக்கின்றது என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

அதேவேளை குறித்த காணியில் குவிக்கப்பட்டிருக்கின்ற  கிரவல்  சட்டவிரோதமாக அகளப்பட்டுள்ளதாகவும் தங்களுடைய புதிதாக அமைக்கப்பட்ட வீதிகள் ஊடாக இவற்றை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது எனவும் அவ்வாறு கொண்டு செல்லப்பட்டால் தமது வீதிகள் அனைத்தும் சேதம் ஆகக் கூடிய நிலைமை இருப்பதாகவும் எனவே அந்த  இடத்திலிருந்து அகற்றுவதற்கு தாம்  அனுமதிக்கமாட்டோம் என குறித்த பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தெரிவிக்கின்றார் ஆக மொத்தத்தில் இவ்வாறு அனைத்து தரப்புகளுக்கும் எந்தவிதமான தகவலும் தெரியாமல் திருட்டுத்தனமாக இடம்பெற்ற இந்த முயற்சியை உடனடியாக  சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைக்கு  உட்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

USER SCOPED TEMP DATA 344b9561a8e1b6574db0e52c1ef5dce9b7d7db962f8aeaa25c689d50be72de14

எனவே இவ்வாறு இயற்கை வளங்கள் அழிப்பது  யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சூழலியலாளர்ளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்