கொள்ளுப்பிட்டியில் சிக்கியது சீன மதுபான போத்தல்கள்!

1618207211 6569106 hirunews 1
1618207211 6569106 hirunews 1

கொள்ளுப்பிட்டி – எல்ப்ரட் ஹவுஸ் வீதியில் சீன உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றிலிருந்து, சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சீன மதுபான போத்தல்கள் கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று (11) இரவு 7.30 மணியளவில் கொள்ளுப்பிட்டி காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அனுமதிப்பத்திரமின்றி இறக்குமதி செய்யப்பட்டட 656 சீன மதுபான போத்தல்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து கடந்த வாரம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பு போன்றவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் நீதிமன்றிலில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.