சட்டவிரோதமான முறையில் 19 மது போத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது!

jail 2478811b
jail 2478811b

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் 19 மது போத்தல்களை கொண்டு சென்ற நபர் ஒருவரை இன்று (13) கைது செய்துள்ளதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் முச்சக்கர வண்டியொன்றில் 19 போத்தல் சாராயத்தினை கொண்டு சென்ற போதே போதைப் பொருள் குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கந்தளாய் நகரிலிருந்து பேராறு பகுதிக்கு முச்சக்கர வண்டியில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போது 19 போத்தல் சாராயத்துடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் பயன்படுத்திய முச்சக்கர வண்டி காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

13,14,ஆம் திகதிகளில் மதுபான சாலைகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.