ரமழான் நோன்புக்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டி

unnamed 1 4
unnamed 1 4

இன்று முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பமாகிவுள்ள நிலையில், சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாக சபைகளுக்கு சுகாதார அமைச்சு கோரிக்கை முன்வைத்துள்ளது.

ரமழான் மாதத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவாயிலில், குறைந்தபட்சம் ஒரு மீற்றர் இடைவெளியில் தரை அடையாளங்கள் இருக்க வேண்டும் என்றும், தொழுகையில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் இடையில், குறைந்தபட்சம் ஒரு மீற்றர் இடைவெளி இருக்க வேண்டும்.

பள்ளிவாசல் பணியாளர்கள் பொருத்தமான, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிதல் வேண்டும்.

நுழைவாயிலில் சவர்க்காரம் மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவதற்கான வசதிகள் இருக்க வேண்டும்.

பள்ளிவாசல்களில் ‘கஞ்சி’ பகிர்ந்தளிக்கக் கூடாது என்பதுடன், பள்ளிவாசலின் உள்ளேயும். வெளியேயும் எந்தவிதமான உணவோ அல்லது பானமோ பகிர்ந்தளிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கக் கூடாது.

தனிமைப்படுத்தலில் இருக்கும் எவரும் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாது.

ஒருநேர தொழுகையில் 100 பேரளவில் மாத்திரமே பங்கேற்க முடியும் என்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.