கரவெட்டி இருதயக்கல்லூரிக்கு உப அதிபராக அருட் தந்தை நியமிப்பு

download 9 2
download 9 2

வடமராச்சி கரவெட்டி திரு இருதயக்கல்லூரிக்கு 60 வருடங்களுக்கு பின்னர் உப அதிபராக அருட் தந்தை ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் புதிய உப அதிபர் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை தமது கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

வடமராட்சியில் மட்டுமன்றி யாழ்ப்பாணத்திலும் புகழ் பூத்த ஒரு கல்லூரியாகும். இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் யாழ் ஆயர். பேரருட் கலாநிதி யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து இக் கல்லூரியின் கடந்த கால கல்விச் செயற்பாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி சிறந்த ஒழுக்கமுள்ள மாணவ சமூதாயத்தை எதிர்காலத்தில் உருவாக்குவதற்கு கல்வித்திணைக்களத்தின் உதவியுடன் அருட் தந்தையை ஒருவரை உப அதிபராக நியமித்து தருமாறு ஆயரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஆயர் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப அதிபரான அருட்தந்தை ஜெனொல்ற்றன் விஜின்ரஸ் அடிகளாரை திரு இருதயக்கல்லூரியின் உப அதிபராக நியமிப்பதற்கு கல்வித்திணைக்களத்தின் உதவியுடன் ஏற்பாடுகளை செய்ததையடுத்து இக்கல்லூரியின் புதிய உப அதிபராக அவர் நியமிக்கப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை அவர் தமது கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

யாழ் .ஆயர் முன்னர் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் அதிபராக பணியாற்றிவர்.1992 ஆவணி இளவாலை பிரதேச மக்கள் இடம்பெயர்ந்தவேளை மானிப்பாயில் கொட்டில்கள் அமைத்து புனித ஹென்றியரசர் கல்லூரியின் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புகளை நடத்தியிருந்தார்

1913 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி யாழ்.ஆயரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த நிலையில் அருட் தந்தையர்களான அல்பிறட் பெஞ்சமின் 1948-1950 பின் 1954- 1958 வரையும். யாழ் ஆயர் வஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை ஆண்டகை குருவாக இருந்தபோது 1951-1952 அதிபராகவும் அருட் தந்தையர் ஏ.ஜே.மரியாம்பிள்ளை 1952- 1953 வரை பணியாற்றினர்.

இவ்வாறு கத்தோலிக்க அருட் தந்தையர்களும் அருட் சகோதரர்களும் இங்கு அதிபர்களாக பணியாற்றி வந்தததுடன் பல கல்விமான்களை உருவாக்கிய இந்த கல்லூரியை 1960 ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சி ஆட்சியில் கத்தோலிக்க பாடசாலைகளை அரசு சுவீகரித்தபோது இக்கல்லூரி அரசுடைமையானதுடன் கடைசியாக 1961 அருட் தந்தை ஜே.ஏ.கருணாகரர் அடிகளார் அதிபராக கடமையாற்றினார்

இன்று 60 ஆண்டுகளின் பின்னர் அருட்தந்தை ஒருவரை உப அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை என்பது இந்த கல்லூரி மீண்டும் பல கல்வி மாண்களை உருவாக்கும் என்பதில் எள்ளவும் ஜயமில்லை என்பதுடன் அருட்தந்தை ஒருவரை உப அதிபராக நியமிப்பதற்கு உதவிய யாழ்ஆயருக்கும். ஆயரை சந்திப்பதற்கு உதவிய கரவெட்டி பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அடிகளாருக்கும் பழைய மாணவர்களும் பெற்றோரும் கரவெட்டி கல்விச்சமூகமும் நன்றியையும் பாராட்டுக்களையும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை திரு இருதய கல்லூரியில் பணியாற்றிய அருட்தந்தை வஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை ஆண்டகை அனுராதபுரம் புனித யோசப் கல்லூரிக்கு அதிபராக இடமாற்றலாகிச்சென்றார் 1960 அனுராதபுரம் புனித யோசப் கல்லூரியை அரசு சுவீகரிக்கும் வரை அங்கு கடமையாற்றிய அவர் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபராக பணியாற்றியபோதே (1966) திருமலை-மட்டுநகர் துணை ஆயராக பாப்பரசரால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.