நாடாளுமன்றம் ஐம்பது நிமிடங்கள் ஒத்திவைப்பு!

Parliment AR 1
Parliment AR 1

நாடாளுமன்றில் இன்று பிரேரணைகள் தொடர்பில் எதிர்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் போதிய வரவின்மை காரணமாக சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 50 நிமிடங்களில் சபை ஒத்திவைக்கப்பட்டது.

ஆளும் தரப்பில் 4 உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றில் இன்று பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது சட்டமூல சமர்ப்பன முன்னறிவித்தல் வேளையில் நிதி அமைச்சின் நிதிச் சட்டத்தை திருத்துவதற்கும், வெளிநாட்டு வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்கள் அறவீடொன்றை விதிப்பதற்கான ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்கான ஏற்பாடுகள் செய்வதற்குமானதொரு சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்த முடியாது என எதிர்ப்பை தெரிவித்தனர்.
எனினும் சட்டமூலம் சமர்ப்பிப்பு மட்டுமே இன்றைய தினம் இடம்பெற்றுவதாக சபாநாயகர் அறிவிப்பு விடுத்தார்.