வாகரையில் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்கள் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டம்

01 5 1 1
01 5 1 1

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை கிழக்கில் தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு பிரதேசத்தில் வாழும் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்கள் இணைந்து பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

வாகரை புணானை ஜக்கிய மரண ஆதரவு சங்கத்தினால் ஏற்பாட்டில் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்கள் இணைந்து நடாத்தப்பட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தில் மரதன் ஓட்டம், றபான் அடித்தல், வினோத உடை உட்பட பல்வேறு கலாச்சார நிகழ்சிகள் மற்றும் இசை நிகழ்சிகளும் நடைபெற்றதுடன், பாரம்பரிய உணவு வகைகளும் வழங்கப்பட்டது.

இதன்போது தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசத்தில் வாழும் தமிழ் மற்றும் சிங்கள சமூக மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.