வவுனியா பட்டக்காடு கிராமத்தில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு

IMG 1529
IMG 1529

வவுனியா பட்டக்காடு கிராமத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டைமுன்னிட்டு விளையாட்டு நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

வவுனியா பட்டக்காடு ஸ்ரீராம் அறிநெறி பாடசாலை மற்றும் கிராமத்து இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக வவுனியா நகரசபை உறுப்பினர்களான எஸ்.காண்டீபன், ஏ.எம்.லரீப், ஏ.அப்துல் பாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மலர் தூவி பவனியாக அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் அரம்பமாகியிருந்தது.

கிராமத்து பாரம்பரிய விளையாட்டுக்களான கயிறிழுத்தல், தலையணை சண்டை, முட்டியுடைத்தல், தேங்காய் துருவுதல், ஓலை பின்னுதல், சாக்கு ஓட்டம் மற்றும் சிறுவர்களின் கலை கலாசார விளையாட்டுக்கள் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர் செ.சந்திரகுமார் , சிறுவர் நன்நடத்தை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயகெனடி, திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ரவி, விதுசா அறக்கட்டளையின் தலைவர் பவன், வேப்பங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தேவா, வவுனியா பள்ளிவாசல் தலைவர் லியாக்கத்அலி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.