மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு : 16 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

download 2 17
download 2 17

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்பகுதியில் மாவனெல்லை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்து புத்தர் சிலைகளை சேதபப்டுத்தியமை தொடர்பில் 16 பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் நெருங்கிய சகாவும் தேசிய தெளஹீத் ஜமா அத்த்தின் சிரேஷ்ட தலைவருமான நெளபர் மெளலவி, புத்தர் சிலை உடைப்பை அடுத்து கைது செய்யப்பட்ட இப்ராஹீம் மெளலவி அவரது மகன்மார் இருவர் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராகவே இவ்வாறு குற்றப் பகிர்வுப் தாக்கல் செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன கூறினார்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், இரு சமூகங்களிடையே மோதலை உருவாக்க சதித் திட்டம் தீட்டியமை, 5 புத்தர் சிலைகலை தகர்த்தமை, சமூகங்கைடையே வெறுப்புணர்வுகளை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ளன.

குறித்த வழக்கை விசாரணை செய்ய சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றம் ஒன்றினை அமைக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பிரதம நீதியர்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.