மன்னாரில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு நினைவேந்தல் நிகழ்வு

DSC 0775
DSC 0775

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று இன்று 2 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் குறித்த தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்காக மன்னாரில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று புதன் கிழமை(21) காலை 5.45 மணியளவில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் குறித்த திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதன் போது பாடசாலை மாணவர்கள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதோடு, இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட பாதூகாப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது