றிசாட் மீது குற்றம் சுமத்தும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்!

IMG 5531
IMG 5531

தேர்தல் திணைக்களத்திற்கே களவான வேலை செய்த ஒரே ஒரு அமைச்சர் என்றால் அது றிசாட் பதியுதீன் தான் என வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜாபீர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டம் பாரிய இழப்பை சந்தித்த மாவட்டம். பல அபிவிருத்திகள் செய்யப்பட்டுள்ளதாக பொய்யான தகவலை முன்னாள் இருந்த அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் தனக்குரிய ஆட்களுக்கு பல அபிவிருத்திகளை செய்திருக்கின்றார்.

தன்னுடைய நகரசபை உறுப்பினர்களான இருவருக்கு ஒரு கோடி ரூபாய் பெறுமதியான வீதி திருத்த வேலைகளைக் கொடுத்து பாரிய ஊழல் மோசடியில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த அமைச்சரது ஊழல்களை நாங்கள் வெளியில் கொண்டு வர இருக்கின்றோம்.

நான் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர். இந்த முறையும் போனஸ் ஆசனத்தில் என்னைப் போட்டு நான் வென்று இருக்கின்ற ஒரு உறுப்பினர். தேர்தல் திணைக்களத்திற்கே களவான வேலை செய்த ஒரே ஒரு அமைச்சர் என்றால் அது றிசாட் பதியுதீன் தான்.

இது சம்மந்தமாக தேர்தல் திணைக்களம், சட்டத்தரணிகள் ஊடாக நடவடிக்கை எடுக்கவிருக்கின்றோம். வவுனியா மாவட்டத்தில் உண்ணாவிரதம் ஒன்றும் இருக்க இருக்கின்றோம்.

இவர் பல கள்ள வேலைகளை வழங்கியுள்ளார். எல்லாம் களவு. ஆதாரபூர்வமாக எங்களால் சொல்ல முடியும்.

அமைச்சரின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் சாரதிக்கு 3 வீடுகள். செட்டிகுளம், பாவற்குளம், பட்டானிச்சூர் என்பவற்றில் அந்த வீடுகள் உள்ளன. அதேபோல் குறித்த நகரசபை உறுப்பினரின் அண்ணன், சகோதரி ஆகியோருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் தேர்தல் சட்ட முறைக்கே அவர் கள்ள வேலை செய்துள்ளார். தேர்தல் கேட்ட ஒரு வேட்பாளர் கூட கையொப்பம் இடவில்லை. அப்படி கையொப்பம் வைக்காமல் ஒரு நகரசபை, பிரதேச சபை ஒன்று வைத்திருக்கிறார். அது களவு.

அவர் வைத்திருக்கிற பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள் முழுக்க களவு. ஆதர பூர்வமாக எங்களால் வெளிப்படுத்த முடியும்.

அது நடந்து கெண்டிருக்கின்றது. இனி அவருடைய படம் வவுனியாவில் ஓடாது. அவருடைய தம்பி செய்த ஊழல்களை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றோம். வவுனியாவில் இனி இந்த மாதிரி வேலைகளுக்கு இடமளிக்கமாட்டோம்.

தற்போதைய அபிவிருத்திக் குழுத் தலைவர் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று வேறுபாடு பார்க்காதவர். இந்தப் பதவியை அப்படியான இவருக்கு கொடுத்ததிற்காக அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உண்மையில் வவுனியா மாவட்டம் இனி தான் அபிவிருத்தியில் முன்னேறக் கூடிய சந்தப்பம் இருக்கிறது. தேர்தலில் அமைச்சரால் இடம்பெற்ற கள்ளப் பிரச்சனையை சொல்வதற்கு எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதனால் சொல்லவில்லை.

நான் ஒரு முஸ்லிம். இனிமேல் அப்படி நடக்காது. அவரது அடியாளுக்கு கொடுத்த வேலைத்திட்டங்கள் ஏழை மக்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம் என்றார்.