கொரோனா தடுப்பு வேலைத் திட்டத்திற்கு தென்கொரிய அரசாங்கம் உதவி!

Pavithra.Wanniarachchi.2 1
Pavithra.Wanniarachchi.2 1

இலங்கையில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமையைக் கட்டுப்படுத்த, தென்கொரிய சுகாதாரத் துறையின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வூரில் ஜானங்க்கும் (Woojing Jeong ) இடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (22) மாலை தென்கொரிய தூதுவரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் கொரோனா கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்திற்கு, தென்கொரியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்ற வழிமுறைகள் தொடர்பாக தென் கொரியத் தூதுவர் சுகாதார அமைச்சருக்கு தெளிவு படுத்தியதுடன், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் கொரியாவுக்கிடையில் காணப்படுகின்ற நீண்டகால நட்பினூடாக கொரிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்குகின்ற உதவியைப் பெரிதும் பாராட்டுவதாகவும், ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கம் சார்பாகவும் இதற்கான விசேட நன்றியைத் தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் இங்கு தெரிவித்துள்ளார்.