கொரோனா நிலைமை தீவிரமடையாதிருக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்- பவித்திரா வன்னியாராச்சி

Pavithra.Wanniarachchi.2 1
Pavithra.Wanniarachchi.2 1

இலங்கையில் நாளொன்றுக்கு 1000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் சிகிச்சையளிப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

எவ்வாறிருப்பினும் நிலைமை அந்தளவிற்கு தீவிரமடையாமலிருப்பதற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொவிட் தொடர்பான நேற்றைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கடந்த ஆண்டு இரு தடவைகள் தீவிரமான கொவிட் தொற்று ஏற்பட்ட போதிலும் , மக்களின் முழுமையான ஒத்துழைப்பினால் அதனை வெற்றிகரமாக கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. 

அதேபோன்று இம்முறையும் மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாரம் நீண்ட விடுமுறை என்பதால் பெருமளவானோர் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டிருக்கலாம். 

தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தற்போது பரவும் வைரஸ் 14 நாட்களின் பின்னரே அறிகுறிகளை காண்பிக்கிறது. எனவே நாட்டை பாதுகாக்க மிகுந்த பொறுப்புடன் செயற்படுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.