வவுனியா பூந்தோட்ட வீதி போக்குவரத்து தடை

IMG 20210424 090427
IMG 20210424 090427

வவுனியாவில் இருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியில் பாரவூர்தி ஒன்று புதைந்தமையால் இன்று காலை பல மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து பூந்தோட்ட நகரிற்கு செல்லும் பிரதான வீதியில் பாலம் புனரமைப்பு திருத்த வேலைகள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை பொருட்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி குறித்த வீதியில் புதைந்தமையால் பல மணி நேரம் அவ்வீதி போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இதனால் குறித்த வீதியால் பல்வேறு தேவைகருதி வவுனியா நகருக்கு பயணிக்கும் மக்கள் வவுனியா நகரில் இருந்து குறித்த நகருக்குள் பயணிக்கும் மக்கள் போக்குவரத்து தடை ஏற்பட்டதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.