பன்னல பகுதியில் ஏற்பட்ட வெடிப்பில் இருவர் காயம்

download 8 4
download 8 4

இப்பாகமுவ, பன்னல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 22 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் தற்சமயம் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பட்டாசினுள் உள்ள வெடி மருந்துகளை அகற்றி அவற்றை இரும்பு குழாய் ஒன்றில் செலுத்தி அதனை மின்சார கிரைண்டரை கொண்டு வெட்ட முற்பட்ட போது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.