மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி அவசர கூட்டம்

01 4 2 2
01 4 2 2

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கத்தின் காரணமாக கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் ரமழான் காலத்தில் பொதுமக்களின் வைரஸ் பாதுகாப்பு கருதி அவசர கூட்டம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை காவல்நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, முஸ்லிம் சமூக பண்பாட்டலுவல்கள் திணக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.சியாத், மேற்பார்வை பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், சுகாதார பரிசோதகர்கள், வர்த்தகர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தற்போது ரமழான் காலமாக உள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் பிரதேசத்தில் பரவாத நிலையில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை பின்றபற்றி நடந்து கொள்ள வேண்டும், அத்தோடு பள்ளிவாசல்களில் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு தொழுகை முற்றாக தடை செய்யப்படும். வெளி இடங்களில் இருந்து வருகை தந்தால் சுகாதார திணைக்களத்திடம் அறிவிக்க வேண்டும்.

ரமழான் காலம் என்பதால் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரஸ் தாக்கம் பரவாத நிலையில் நடந்து கொள்ள வேண்டும், சுகாதார விதிமுறைகளை மீறி நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.