மட்டக்களப்பில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா!

IMG 2060
IMG 2060

நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பையிட்டு மட்டக்களப்பு கொக்குவில் வாராந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய வந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட 100 பேருக்கு எழுமாறான பி சி ஆர் பரிசோதனை ஒன்று இன்று திங்கட்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டது இதில் ஒருவியாபரிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் இன்று வாராந்த சந்தை இடம்பெற்றது இதன் போது அங்கு பெரும் திரளான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்தலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராச்சி தலைமையில் காவல்துறையினர், பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த சந்தைப் பகுதியினை முற்றுகையிட்டு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும் மக்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறும்
ஒலிபெருக்கி மூலம் நேரடியாக அறிவுரைகளை லழங்கியதுடன் அங்கு வியாபாத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், பொதுமக்கள் 90 பேருக்கும் 10 காவல்துறையினர் உட்பட 100 பேருக்கு பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது இதில் ஏறாவூரைச்சோர்ந்த வியாபாரி ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.