கொரோனாவுக்கு மத்தியில் நயினாதீவில் வெசாக் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

hari waisak 5742b158ba9373090c4ab319 e1527497793749
hari waisak 5742b158ba9373090c4ab319 e1527497793749

தேசிய வெசாக் கொண்டாட்டம் இம்முறை நயினாதீவில் இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாட்டுக் கூட்டம் நயினாதீவு ரஜமகா விகாரையில் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மே மாதம் 31ஆம் திகதி வரையில் நிகழ்வுகள், கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. இதேவேளை ஆலயத் தேர்த் திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டதாகத் தெரிவித்து ஆலய நிர்வாகிகள் கைதாகி காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழலில் எதிர்வரும் மே மாதம் இறுதி வாரத்தில் தேசிய வெசாக் கொண்டாட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் மற்றும் மாவட்டச் செயலர் க.மகேசன் ஆகியோரின் பங்கேற்புடன் ரஜமகா விகாரையில் நேற்றுமுன்தினம் குறித்த கூட்டம் நடைபெற்றுள்ளது.