பிரிட்டன் வைரஸின் பாதிப்பு வடக்கில் இதுவரை இல்லை – மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவிப்பு

21 6085804fb337b
21 6085804fb337b

இலங்கையில் தற்போது பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸானது பிரிட்டனில் பரவிவரும் பி.1.1.7. வைரஸ் என்பது 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் வடக்கு மாகாணத்தில் இன்னமும் கண்டறியப்படவில்லை.

– என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்த வைரஸ் இலங்கையில் மூன்று இடங்களில் மாத்திரம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடமிருந்து பெறப்பட்ட 43 மாதிகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே பிரிட்டன் வைரஸ் என்பது உறுதியாகியுள்ளது – என்றார்.

பிரிட்டனில் இவ்வகையான வைரஸே பேரழிவை ஏற்படுத்தியதுடன், சமூகத்திலும் அசுர வேகத்தில் பரவியது. இதன்மூலம் அதிகளவு இளையோரும் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.