ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் ஆலய திருவிழா

B
B

தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித சூசையப்பரின் பெயரால் அமைந்துள்ள யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் தேவாலயத்தின் திருவிழா இன்றாகும்.

நூற்றாண்டு ஜூபிலி ஆண்டாக இவ்வாண்டு திருவிழா அமைந்தமை விஷேட அம்சமாகும்.

இதன்படி இன்று காலை 6.30 மணி திருவிழா திருப்பலி கொவிட்-19 தடுப்பு வழிகாட்டல் விதிமுறைகளுக்கமைய சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடன் இன்றைய திருவிழா திருப்பலி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.