போக்குவரத்து சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது – அஜித் ரோஹண

ajith rohana1 1
ajith rohana1 1

நாடு முழுவதும் கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கொவிட் சட்டத்தை கடுமையாக அமுலாக்க காவல்துறை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய கொவிட் சட்டங்களை மீறி போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய பேருந்தொன்றில் ஏற்றிச் செல்லக் கூடிய பயணிகள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான விசேட சோதனை நடவடிக்கை இன்று (01) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்  தெரிவித்தார்.