கொவிட் தடுப்பு விடயத்தில் அரசு தோல்வி – எம்.ஏ.சுமந்திரன்

download 18
download 18

கொவிட் தடுப்பு விடயத்தில் அரசாங்கம் பல இடங்களில் தோல்வி அடைந்திருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இன்று நாடாளுமன்றில் நடைபெற்ற கொவிட் பரவல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது இந்தவிடயத்தை குறிப்பிட்டார்.

கொவிட் பரவல் போன்ற சூழ்நிலைகளை கையாளுவதற்கான உரிய சட்டங்கள் இலங்கையில் இல்லை.

இது தொடர்பாக இருக்கின்ற சட்டத்திட்டங்கள் 100 முதல் 150 வருடங்கள் பழமையானவையாகவும், தற்போதைய சூழ்நிலைகளுக்கு பொருந்தாதனவாகவும் இருக்கின்றன.

கொவிட் பெருந்தொற்று ஏற்பட்டு முதல் 5 மாதங்களில் அவ்வாறான சட்டத்திட்டங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டாலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவ்வாறான சட்டங்கள் எதனையும் உருவாக்காமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பல்வேறு வெளிநாடுகள் இதுதொடர்பான சட்டத்திட்டங்களை உருவாக்கியுள்ளன.

ஆனால் அரசாங்கம் இது தொடர்பாக விரைவாக செயற்படாமல், துறைமுகநகர சட்டமூலம் போன்ற வெவ்வேறு சட்டமூலங்களை கொண்டுவருவதற்கே முயற்சிகளை எடுத்து வருகின்றது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.