ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கரை சந்தித்தார் சஜித்

1620267529 7001358 hirunews
1620267529 7001358 hirunews

ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கருக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்த இந்த கலந்துரையாடலில், தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள சவால் நிலைமைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையினை சமாளிப்பதற்கான ஒத்துழைப்புகளை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட பிரதிநிதியிடம் கோரியுள்ளார்.

இது குறித்து விசேட அவதானம் செலுத்திய பிரதிநிதி, அதற்கான உச்சபட்ச தலையீட்டை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

அரசியல் என்ற ரீதியில் பல்வேறு பரஸ்பரங்கள் காணப்பட்டாலும், கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி, கொவிட் 19 பரவலை பயன்படுத்தி அரசியலில் ஈடுபடமாட்டாது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கரிடம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.