அலரி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

1620272483 ipthar 02
1620272483 ipthar 02

முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் நேற்று (05) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

முஸ்லிம் கட்சிகள் சிலவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத் தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.

முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து நட்பு ரீதியாக கலந்துரையாடியதுடன், இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.