ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஸ்புட்னிக் வீ தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

116573108 115602284 hi064300325 1 1
116573108 115602284 hi064300325 1 1

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஸ்புட்னிக் வீ (sputnik v) தடுப்பூசிகளை, பொதுமக்களுக்கு வழங்கும் பணி இன்று (06) ஆரம்பமானது.

கொலன்னாவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கொதடுவை பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு முதலாவதாக இந்த தடுப்பூசி வழங்கப் படுவதாக கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

மேலும், ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப் பட்டவர்களுக்கு அந்த தடுப்பூசியின் இரண்டாவது டோசை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவில் இருந்து 15,000 ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிகள் முதல் கட்டமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், எதிர்காலத்தில் மாதத்திற்கு ஒருமுறை 13 மில்லியன் வரையிலான தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.