இலங்கையில் மேலும் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF
202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF

இலங்கையில் மேலும் 792 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 1,889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 121,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.