வாழைச்சேனையில் விசேட மஹாம் ருத்யுஞ் ஜய யாக பூசை

01 11 1
01 11 1

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உயரிய சிந்தனைக்கு அமைவாக எமது நாட்டில் கொரோனா நோய் தாக்கங்கள் நீங்கப்பெற்று நாட்டு மக்கள் சுகமாகவும் சுபீட்சமாகவும் வாழும் முகமாக இறை அருள் வேண்டி சர்வமத வழிபாடுகள் நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்றது.

01 3 1

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இன்று சனிக்கிழமை மாலை 5.46 மணிக்கு நாடு பூராகவும் கொரோனா நோய் தாக்கம் நீங்கப்பெற்று நாட்டு மக்கள் சுகமாக வாழ வேண்டி பிராத்தனைகள் இடம் பெற்றது.

01 9

அந்தவகையில் வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட மஹாம் ருத்யுஞ்ஜய யாக பூசைகள் இடம்பெற்றதுடன், கொரோனா வைரஸ் பரவல் நீங்கி மக்கள் பாதுகாப்பு வேண்டி அபிஷேகப் பூசைகள் என்பன இடம்பெற்றது.

குறித்த பூசைகள் யாவும் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ பத்மஸ்ரீதர குருக்கள் தலைமையில் இடம் பெற்றது. இதில் வாழைச்சேனை கிராம அதிகாரி எஸ்.வரதராஜன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் சுகாதார விதிமுறைகளை பேணி கலந்து கொண்டனர்.