நிபுணர் குழுவின் அனுமதியுடன் கொரோனா தடுப்பூசி

Coronamedicine 1583822800908 2
Coronamedicine 1583822800908 2

மக்களுக்கு ஏற்றப்படும் சகல கொவிட் தடுப்பூசிகளும் நிபுணர் குழுவின் அனுமதியுடன் ஏற்றப்படுவதாக தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் தலைவர் ரசிக விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி ஏற்றுவது பற்றி எவரும் அச்சப்படத் தேவையில்லை.

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள ‘சைனோபாம்’ தடுப்பூசி காலாவதியானது என ஊடங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டார்.

குறித்த தடுப்பூசியின் உற்பத்தி அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். சைனோபாம் தடுப்பூசி 2023ம் ஆண்டிலேயே காலாவதியாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றுக்கு இலக்காகி வீடுகளில் தங்கியிருப்பவர்கள் வீடுகளில் இருந்தவாறு சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளின் பிரகாரம் செயற்படுவது முக்கியம் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொவிட் நெருக்கடி நிலையில்; குருதிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தேசிய இரத்த வங்கி தெரிவித்துள்ளது. இரத்ததானம் செய்ய விரும்புவோர் காலத்தை முற்கூட்டி ஒதுக்கிக் கொண்டு நாடு பூராகவுமுள்ள மத்திய நிலையங்களுக்குச் சென்று இரத்ததானம் செய்ய முடியும்.