மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

vegetables
vegetables

நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில வியாபாரிகள் இரசாயன உர வகைகளுக்கும் கிருமி நாசினிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும் வண்ணம் செயற்படுகின்றார்கள் இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தெரிய வருவதாவது,

அரசாங்கம் இரசாயன உர வகைகளை இறக்குமதி செய்வது தொடர்பாக தடை விதித்திருக்கின்ற நிலையில் ஒரு சில வியாபாரிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளை இலாபம் பெருகின்ற வகையில் தங்களுடைய வியாபார நிலையங்களில் இரசாயன உர வகைகளையும் கிருமி நாசினிகளையும் பதுக்கி வைத்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை காரணமாக தற்பொழுது அறுவடை மிகவும் குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலைகள் 300 முதல் 400 அல்லது 500 ரூபாய் வரை விலை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதாகவே விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.