மட்டக்களப்பில் 6 மணியுடன் கடைகளுக்கு பூட்டு, வெளிமாவட்ட போக்குவரத்துக்கு தடை

IMG 2604 1
IMG 2604 1

மட்டக்களப்பு மாவட்டத்தற்குள் உள் நுழைபவர்களை மாவட்டத்தின் எல்லையில் அமைக்கப்படும் சோதனைச்சாவடியில் அவர்களை பதிவு செய்து பின்னர் அன்டிஜன் பரிசோதனையின் பின்னர் அனுமதிக்கப்படும் எனவும் வெளி மாவட்டங்களுக்கு பயணிகள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணியுடன் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் இன்று செவ்வாய்க்கிழமை (11) இருந்து பூட்டுவதாக தீர்மானிக்ப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் தெரிவித்தார்.

மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (11) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானம் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 9 கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டனர் அவ்வாறே திங்கட்கிழமை 20 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இந்த வகையினை பாக்கும்போது சடுதியாக அதிகரிக்கின்றது சிலவேளை குறைவாக இருக்கின்றது எனவே இன்று ஆராய்ந்து பலமுடிவுகளை எடுத்துள்ளோம்.

கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்த தீர்மானமான அத்தியாவசியமான மருந்தகம், பலசரக்கு கடைகள், சுப்பமாக்கட்கள் போன்றவை இரவு 9 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய அனைத்து கடைகளும் மாலை 6 மணியுடன் மறு அறிவித்தல்வரை மூடப்படவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திறுகு உள்நுழையும் பகுதியான உல்லையில் 7 இடங்கள் அடையாப்படுத்தப்பட்டுள்ளது இதில் வீதிச்சோதனை சாவடிகள் அமைத்து இராணுவத்தினர் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அத்தியாவசிய மற்றும் வைத்திய சேவைக்காக செல்பவர்களை விடுத்து ஏனையவர்கள் மாவட்டத்தை விட்டு செல்ல தடைசெய்வதாகவும், மாவட்டத்துக்குள் நுழைபவர்கள் சோதனைச் சாவடியில் பதிவு செய்து அன்டிஜன் பரிசோதனையின் பின்னர் அனுமதிக்கப்படுவர்.

மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்காக போக்குவரத்து சேவைக்கு இன்றில் இருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் தனியார்போக்குவரத்து அம்பாறைக்கும் திருகோணமலைக்கும் இடையில் ஒரு போக்குவரத்து சேவை மட்டும் இடம்பெறும் அந்த சேவை கூட இடையில் நிறுத்தாமல் அம்பாறையில் இருந்து நேரடியாக திருகோணமலைக்கு மட்டும் இடம்பெறும் எனவும்.

பெரியகல்லாறு ,காத்தான்குடி, கரடியனாறு, வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக இயங்கிவருகின்றது இங்கு சுமார் 400 நோயாளர்களை மாத்திரம் தங்கவைத்து சிகிச்சையளிக்கமுடியும் இருந்தபோதும் மேலும் 500 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை தேவையாகவுள்ளது

எனவே அரசாங்கம் தொற்றாளர்களை பராமரிக்கும் ஆயிரம் கட்டில்கள் கொண்ட ஒரு வைத்தியசாலையை உருவாக்கும் திட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட விடுதியை தற்காலிகமாக சிகிச்சையளிக்கு வைத்தியசாலையாக மாற்றவேண்டியது தொடர்பாக அந்த இடத்துக்கு களவிஜயம் ஒன்றை மேற்கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு அநாவசியமாக வெளியே வரவேண்டாம் மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்கு அனாவசியமாக செல்வதை தடுத்துக் கொள்ளுமாறும் சுகாதார அமைச்சிகன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.