மட்டக்களப்பில் கொரோனாவினால் 16 பேர் உயிரிழப்பு

body2
body2

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் சிகிச்சைபெற்றுவந்த இருவர் சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் கொரோனா தொற்று உறுதி 1285 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாள் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.

கொரோனா தொற்றினால் போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 74 வயதுடைய ஒருவரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 61 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழப்பு 16 அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்பில் 22 ம் திகதி ஆரம்பித்த கொரோனா 3 அலையில் மாவட்டத்தில் அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் 302 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளர்கள் 1285 பேராக அதிகரித்துள்ளது.

எனவே மாவட்டத்தில் நாளாந்தம் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றதுடன் தொடர்ந்தும் தினமும் எழுமாறாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வீடுகளை விட்டு அனாவசியமாக வெளிவருவதை தவிர்த்து கொள்ளுமாறும் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து முன்னெடுத்து அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அதேவேளை கொரோனாவினால் இன்று நிந்தவூரைச் சேர்ந்த ஒருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து மட்டு போதனா வைத்தியசாலையில் 3 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.