நேற்று 92,927 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

Coronamedicine 1583822800908 2
Coronamedicine 1583822800908 2

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 92,927 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

3,335 ஸ்புட்னிக் தடுப்பூசிகளும், 79,403 சினோபாம் தடுப்பூசிகளும் அவற்றுள் அடங்கியுள்ளன.

அதேநேரம் 10,189 பேருக்கு அஸ்ட்ரா-செனகா கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசி நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரை 1,090,521 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.