முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பிற்கு காவல் நிலையத்தில் முறைப்பாடு

received 144617944310281
received 144617944310281

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமையப்பெற்ற போரில் உயிரிழந்தவர்கள் நினைவான நினைவேந்தல் முற்றத்தில் புதிதாக பொது நினைவுக்கல் ஒன்று நடுகை செய்வதற்காக 12.05.21 அன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு பாரிய நினைவுக்கல் ஒன்று இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி காவல்துறையினர் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நினைவுக்கல் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு படையினர் மற்றும் காவல்துறையினர் படை புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நினைவேந்தல் கட்டமைப்பினை சேர்ந்தவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு காவல் நிலைய அதிகாரிகள் அங்கு எந்த பணிகளும் செய்யக்கூடாது என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை சேர்ந்தவர்கள் குறித்த பகுதியில் இருந்து சென்ற நிலையில் நேற்று இரவு தொடக்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதி இராணுவத்தின் பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது இரவு காவல்துறையினர் குறித்த பகுதியில் இல்லாது இராணுவ பாதுகாப்பில் இருந்துள்ளது நேற்றிரவு பத்து மணியளவில் குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர்கள் சிலர் செல்ல முற்பட்டபோதும் இராணுவத்தால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காவல்துறையினரை அழைக்குமாறு ஊடகவியலாளர்கள் கோரிய போது அங்கு காவல்துறையினர் இருக்கவில்லை இன்னிலையில் முற்றுமுழுதான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் குறித்த பகுதி கொண்டுவரப்பட்டுள்ள நிலைமையிலேயே இரவோடு இரவாக புதிதாக கொண்டு வரப்பட்ட நினைவுக்கல் காணாமல்ஆக்கப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த நினைவு சின்னம் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நிலைமைகளை பார்வையிட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை சேர்ந்தவர்கள் மதகுருமார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் செல்வராசா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் சென்று முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்