படையினரே நினைவுத்தூபியினை உடைத்துள்ளார்கள் -செல்வம் அடைக்கலநாதன்

received 843748562907708
received 843748562907708

எங்கள் பங்குத்தந்தையர்கள் நேற்று ஆரம்பிக்கின்ற நாளாக நினைவுச் சின்னத்தினை நாட்டுவதற்காக வந்தபோது படையினர் குவிக்கப்பட்டு அதனை செய்யவேண்டாம் என காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள்.
அதன்பின்னர் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது ஆகவே படையினர் அந்த நினைவுத்தூபியினை உடைத்துள்ளார்கள் என்பதை வெளிப்படையாக சொல்கின்றேன்.என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் குறித்த இடத்துக்கு இன்று காலை வருகைதந்து பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்தெரிவிக்கையில்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டுள்ளது எங்கள் மக்கள் துன்பங்களை நினைவு கூருகின்ற நினைவுத்தூபியாக புனித இடமாக பார்க்கப்பட்டுள்ளது படையினரின் அடாவடித்தனங்கள் காவல்துறையினரின் மேற்பார்வையுடன் உடைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கின்றது.

எங்கள் பங்குத்தந்தையர்கள் நேற்று ஆரம்பிக்கின்ற நாளாக நினைவுச் சின்னத்தினை நாட்டுவதற்காக வந்தபோது படையினர் குவிக்கப்பட்டு அதனை செய்யவேண்டாம் என காவல்துறையினர் அறிவித்துள்ளார்கள்.
அதன்பின்னர் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது ஆகவே படையினர் அந்த நினைவுத்தூபியினை உடைத்துள்ளார்கள் என்பதை வெளிப்படையாக சொல்கின்றேன்.

இதில் இருந்து தெரிகின்றது இந்த தேசதம் இரண்டாக உள்ளது சிங்களதேசம் தமிழ்தேசம் என இரண்டாக இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. குருந்தூர்மலையில் புத்தபிக்குகள்,படையினர் புடைசூழ பிரித் ஓதப்பட்டு விழாக்கோலம் போல் காட்சியளித்தது இராணுவத்தளபதி சொல்கின்றார் நினைவேந்தலை வீடுகளில் செய்யவேண்டும் என்று சொல்கின்றார்கள் இன்றில் இருந்து 17 ஆம் திகதி வரை கொரோனா வைரஸை நிறுத்துவதற்காக நாடு முடக்கப்படுகின்றது.

புத்த பிக்குகள் தமிழர் பிரதேசத்தில் வந்து பெரியளவில் பிரித் ஓதுகின்றார்கள் படையினர் குவிக்கப்பட்டு சுகாதார முறைப்படி அவர்கள் எப்படி செயற்பட்டிருக்கமுடியும் அங்கு சட்டம் வேறாக இருக்கின்றது.
எங்கள் பங்குத்தந்தைகள் இங்கு வந்து நினைவுத்தூபியினை செப்பனிடவரும் போது தடுக்கப்படுகின்றார்கள் காரணம் வைரஸ்தொற்றுக்கான நடவடிக்கை என்று .

இதில் தெரிகின்றது இந்த நாடு புத்த பிக்குகளின் இராச்சியமாக இந்த நாடு மாறிஇருக்கின்றது இதனை விட இரண்டு நாடுகளாக இலங்கை இருக்கின்றது தமிழர்களின் பிரதேசத்தில் எதுவும் நடக்கலாம் சிங்கள பிரதேசங்களில் மிகவும் நேர்த்தியான முறையில் அவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றது.
ஆகவே புத்த பிக்குகள்,இராணுவம்,காவல்துறையினர் தமிழ்பிரதேசங்களில் எதுவும் செய்யலாம் சட்டம் ஒழுங்கு என்பது இங்கு மறுக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழர்கள் பூர்வீகம் உடைக்கப்படுகின்ற சிதைக்கப்படுகின்ற ஒரு நிலையினை இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றது என்பதை உறுதியாக இந்த நேரத்தில் உணர்த்த முடியும் ஆகவே எங்கள் மக்கள் எங்கள் கட்சிகள் ஒன்றிணையவேண்டும் இதற்காக போராடவேண்டும் எங்கள் தேசத்தினை நிலத்தினை காப்பாற்ற நாங்கள் முனைப்புடன் செயற்படவேண்டும் என்று படுகொலைசெய்யப்பட்ட மக்களின் அவல ஓலங்கள் ஜ.நாவினை தட்டியது எங்கள் கட்சிகளின் மனங்களையும் தட்டவேண்டும் பொதுமக்களின் மனங்களையும் தட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.