மஸ்கெலியா நகருக்கு செல்லும் பிரதான வீதியில் மண்சரிவு

கினிகத்ஹேன – தியகல, நோட்டன் பிரிட்ஜ் ஊடாக மஸ்கெலியா நகருக்கு செல்லும் பிரதான வீதியின் பல இடங்களில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளன.

இதனால், அத்தியாவசிய சேவைகளுக்காக அந்தப் பாதையின் ஊடாக பயணிப்போர், மாற்று வழிகளை பயன்படுத்துமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோர்ட்டன் பிரிட்ஜ் – லொனெக்வத்த வீதியில் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது. மண்ணை அகற்றும் பணிகளை வீதி அதிகாரசபை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.