பயணத் தடையை மீறி மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் குவிந்த மக்கள்

Screenshot 20210515 151410 Chrome
Screenshot 20210515 151410 Chrome

பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு விடுத்திருந்த நிலையில், இரவு நேர மீகொட பொருளாதார மத்திய நிலையம் நேற்று (14) திறந்து வைக்கப்பட்டிருந்தது.

எனினும், மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்காக பொது மக்கள் வராத காரணத்தால் சுமார் 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்கறிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள் பயணத் தடையையும் மீறி ஆயிரத்திற்கும் அதிகமானோர் நீண்ட வரிசையில் நின்று மரக்கறியை பெற்றுச் செல்ல வந்திருந்தனர்.

இதன் காரணமாக, எதிர்வரும் திங்கட் கிழமை வரை மரக்கறிகளை கொண்டு வருவதை நிறுத்தவும், கடைகளை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் செயலாளர் சமிந்த ரொஹான் தெரிவித்தார்.