இன்றும் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன!

IMG 1311
IMG 1311

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் இன்றைய தினமும் அமுலில் உள்ளன.

நாளை (17) அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாட்டு காலம் நிறைவடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், நாளை (17) தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில், நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலத்தில், பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக, கொழும்பு உட்பட ஏனைய பல பகுதிகளில், இராணுவத்தினர் உந்துருளிகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.